ஆட்டக்காரிக்கு 500 ரூபாயா ரேஞ்சுக்கு மல்லையா செய்த வேலை!!!!
2015-16 காலகட்டத்தில் 330 கோடி ரூபாய்க்கு விஜய் மல்லையா இங்கிலாந்து மற்றும் பிரான்சில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. ஐடிபிஐ வங்கியில் 900 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு தலைமறைவாக இருப்பதாக கிங்பிஷ்ஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இது சம்பந்தமான வழக்கில் குற்றப்பத்திரிகையில் கூடுதல் பக்கங்களை சிபிஐ இணைத்துள்ளது.இதில் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் பொது மேலாளர் புத்ததேவ் தாஸ்குப்தா பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனை போர்ஸ் இந்தியா பார்முலா 1 டீமுக்கு மாற்றியதற்கான ஆவணங்களையும் சிபிஐ திரட்டியுள்ளது.2008 முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கணிசமான தொகை கடன்களாக கைமாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த முறைகேடுகள் தொடர்பாக விஜய் மல்லையா மீது சிபிஐயும், பண மோசடி புகாரில் அமலாக்கத்துறையும் மல்லையா மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதுடன் அது தொடர்பான விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். கிங் பிஷ்ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித்தவித்த போதும்அதனை கண்டுகொள்ளாமல் பிரிட்டன் மற்றும் பிரான்சில் வீடு வாங்கியது எப்படி என்றும் விசாரணை வேகமெடுத்துள்ளது.