இதில் நிரவ், மல்லையா பெயர் இருக்கா?
2021-22 நிதியாண்டில் வகைபடுத்தப்பட்ட வணிக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடனில், 33 ஆயிரத்து534 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது. 2021-ல் இந்த தொகை 30104 கோடி ரூபாயாகவும்,2019ம் ஆண்டு 25,501 கோடி ரூபாயாக இருந்தது.இதே தொகை கடந்த 2018ல் 12,881 கோடி ரூபாயாக இருந்தநதாக ரிசர்வ்வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட ஒரு கடனை இனி எப்போதும் திரும்ப வாங்கவே முடியாதபட்சத்தில் வங்கிகள் கடனில் குறிப்பிட்டுள்ள சொத்துகளை ஏலமிடும் முறை அமலில் உள்ளது. எஸ்ஸார் குழுமத்தில் நடக்கும் முறைகடேுகள் தொடர்பாக திமுக எம்பி சின்ராசு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு இவ்வாறு பதில் தந்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி தரவுகளின்படி,கடன் விவரங்களை வெளியிட முடியாது என்றும் மத்திய நிதி அமைச்சகம் பதிலாக தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பரின் தரவுகளின்படி பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் 5 ஆண்டுகளில் 10 லட்சத்து9 ஆயிரத்து 511 கோடி ரூபாயாக வராக்கடன் இருந்ததாகவும், பொதுத்துறை வங்கிகள் வெறும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 45 கோடி ரூபாய் மட்டுமே திரும்பப் பெறப்பட்டதாகவும்,தொடர் மீட்பு நடவடிக்கையால் 4.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் திரும்பக் கிடைத்துவிட்டதாக கூறப்படுறது.