பட்டும் திருந்தாமல் திரும்பவும் முதலீடா?
அதானி குழுமத்தில் பணம் போட்டு PF நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது நாடு முழுக்க பெரிய பிரச்சனைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தொழிலாளர் வைப்பு நிதியை எப்படி அறங்காவலர்கள் கவனத்துக்கு செல்லாமல் முதலீடு செய்யப்பட்டது என்றும் வெளிப்படைத் தன்மை தேவை என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் அதானி குழுமத்தில் மீண்டும் 8ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கையால் பெரிய இழப்பை சந்தித்துள்ள அதானி குழுத்தின் பிரதான நிறுவனங்களில் பெரிய தொகையை எப்படி முதலீடு செய்யப்பட்டது என்றும், இழப்புக்கு யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுந்துள்ளது. வேறு தனிநபர்கள் பிரச்சனை என்றால் அவர்கள் பேசித் தீர்த்துக்கொள்வார்கள் ஆனால் 22கோடி தொழிலாளர்களின் கடின் உழைப்பால் உருவான பணம் எப்படி முதலீடு செய்யப்பட இருக்கிறது என்ற கேள்வி பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. EPFO நிறுவனத்தின் அறங்காவலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனில் இந்த முதலீடானது தொடர்ந்து இருக்கத்தான் செய்யும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. கடந்த சனி,ஞாயிறில் நடக்க இருந்த அறங்காவலர்களின் இயக்குநர்கள் குழுவினர் கூட்டம் மீண்டும் திங்கள் செவ்வாயில் நடத்தப்படுகிறது. இதன் முடிவில்தான் PF வைப்பு நிதியை மேம்படுத்துவது,வட்டி விகிதத்தை எவ்வளவாக நிர்ணயிக்கலாம் என்பது குறித்த ஆலோசனை இந்த கூட்டத்தில் நடத்தப்படுகிறது.