மீண்டும் பல்ப் வாங்கிய கூகுள்.!!!
செல்போனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு OEM என்று சந்தைகளில் குறிப்பிடுகின்றனர்.செல்போனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அண்மையில் கூகுளுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதில் தங்கள் செல்போன்களில் கூகுளின் செயலிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவு ஏதும் இன்றி இஷ்டத்துக்கும் கூகுளின் ஆண்டிராய்டு ஆப்களை செல்போன்களில் இன்ஸ்டால் செய்யும்படி OEMகளை கூகுள் நிர்பந்திப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இந்திய போட்டி ஆணையத்தின் கதவை OEMகள் தட்டினர் , இது தொடர்பாக விசாரணை நடத்திய போட்டிகள் ஆணையம் கூகுளுக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்துடன், ஆதிக்கத்தை கூகுள் தவறாக பயன்படுத்துவதாகவும் சாடினர். இதனை எதிர்த்து கூகுள் நிறுவனம் NCLAT எனப்படும் தேசிய நிறுவனசட்ட ஆயத்தில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த NCLAT,1338 கோடி அபராதத் தொகையை கூகுள் நிச்சயம் கட்டித்தான் ஆகவேண்டும் என்று உறுதி செய்துள்ளது. மேலும் 30 நாட்கள் அவகாசமும் கூகுளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கூகுள் நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாட இருக்கிறது. வரும் 31ம் தேதிக்குள் ஒரு முடிவுக்கு வரும்படி NCLATக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சூழலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூகுள் நிறுவனம் உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடியுள்ளது.