யுபிஐக்கு கட்டணம் வசூலிப்பதாக இருந்தால் எவ்வளவு தொகை வசூலிக்கலாம் : ஐஐடி பரிந்துரை
யுபிஐ என்பது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளிமைபடுத்தும் ஒரு அமைப்பாகும். இதனை இந்தியாவில் மக்கள் பரவலாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு சில நிறுவனங்களுக்கு தற்போதும் கட்டணம் வசூலித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.ஆனால் பொதுமக்கள் இதுவரை இலவசமாகவே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் யுபிஐ கட்டமைப்பை நிர்வகிக்க 0.3% பணத்தை வேண்டுமானால் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று ஐஐடி மும்பை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு சிறியதொகையை அரசு வசூலித்தாலேயே 5ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடப்பு நிதியாண்டிலேயே வருவாய் வரும் என்று கூரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐஐடி ஆய்வு கட்டுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள npci செயல்பாட்டுக் கட்டணம்1.1%ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதால் கட்டணம் நிறுவனங்களிடம் இருந்து வசூலிப்பது தவறில்லை என்கிறது அந்த ஆய்வு கட்டுரை. அதன்படி 0.3விழுக்காடு கட்டணம் நிறுவனங்களிடம் இருந்து வசூலித்தாலே அரசுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டை அச்சடிக்க மட்டும் கடந்த சில ஆண்டுகளாக 5ஆயிரத்து 400 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகியுள்ளது. டிஜிட்டல் பணப்புழக்கம் அறிமுகமான நிலையில், ரூபாய் நோட்டுக்கள் அச்சிட ஆகும் செலவைவிட டிஜிட்டல் பேமண்ட் கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம் என்று நிதித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.