உற்பத்தியை குறைத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்கள்:
கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்புக்கு ஆங்கிலத்தில் Opec என்பது சுருக்கமான பெயராக உள்ளது. இந்த அமைப்பில் பிரதானமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சவுதி அரேபியா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த அமைப்பின் கூட்டம் ஏப்ரல்2 ம் தேதி நடைபெற்றது. இதில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்யமாட்டோம் என்று தெரிவித்த நிறுவனங்கள் கூட்டத்தை முடித்தன. ஆனால் சில உறுப்பினர் நாடுகள் மட்டும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்தனர்.அதாவது 11லட்சத்து 60 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெயை ஒரு நாளைக்கு உற்பத்தி செய்வதை நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளனர் கடந்த மாதம் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 70 டாலருக்கும் கீழ் குறைந்தது. வங்கிகள் திவாலானபோது, கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக குறைந்தது.இந்த நிலையில் உற்பத்தியை குறைக்க விரும்பியதால் கச்சா எண்ணெய் 80 டாலரில் இருந்து சற்று அதிகரித்துள்ளது. இதன் விளைவாக குறைந்தபட்சம் 3 முதல் 10 டாலர் வரை விலையேறும் என்றும் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் சந்தையில் நிலையான சூழலை ஏற்படுத்தவே உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. எனினும்இந்த உற்பத்தி குறைப்புன் ரஷ்யாவுக்குத்தான் ஆதரவாக இருக்கிறது என்று அமெரிக்காவும் குற்றம்சாட்டியுள்ளது.