விதிகளை ஏன் கடுமையாக்குறோம் தெரியுமா?
திவாலாகும் நிறுவனங்கள் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள விதிகளில் சட்டத் திருத்தம் கொண்டுவர எந்த தயக்கமும் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
திவால் நிறுவனங்கள் சட்டம் வலுவாக வேண்டும் என்று கூறியுள்ள நிதியமைச்சர், தேசிய நிறுவனங்களின் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிதியமைச்சர், தற்போதைய சந்தை சூழல்கள் வேறு வடிவம் பெற்றுள்ளதாக கூறியுள்ள அவர்,சந்தை நிலவரத்துக்கு தகுந்தபடி சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றார். தீர்ப்பாயத்தில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டியது அவசியம் என்று கூறியுள்ள நிதியமைச்சர்,இந்த பிரச்சனையை முழுகவனத்துடன் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். ஏற்கனவே உள்ள சட்டங்களில் மேலும் மேலும் திருத்தங்கள் கொண்டுவரவேண்டியது அவசியம் என்று கூறியுள்ள நிதியமைச்சர். சிறுமற்றும் குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்கள் விரைவில் நீக்க சட்ட திருத்தம் அவசியம் என்றார். திவால் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருவதில் சிறு சிறு தொழில்நுட்ப கோளாறு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.,இந்தியாவுக்கு முதலீடு செய்ய வருவோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.