விடாது கருப்பு போல, விடாது ஆட்குறைப்பு!!!
உலகின் பல நாடுகளும் பொருளாதார மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செல்வ செழிப்பான நாடுகளும் சிக்கலை சந்தித்து வருகிறது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை பெற்று வந்த கிரிடிட் சூய்சி என்ற நிறுவனம் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்தது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தை யூபிஎஸ் எனப்படும் பிரபல வங்கி வாங்கிக்கொள்வதாக அறிவித்தது. கிரிடிட் சூய்சி நிறுவனத்தில் பணியாளர்கள் பெரிய அளவில் இருப்பதாக நினைத்த புதிய முதலாளியான UBS, செய்யும் முதல்வேலையே அளவுக்கு அதிகமான பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதுதான். யுபிஎஸ் வங்கியின் தரவுகளின்படி, கிரிடிட் சூய்சியின் பணியாளர்களின் எண்ணிக்கையில் 30விழுக்காடு வரை குறைக்கப்படுகிறது. திடீரென கிரிடிட் சூய்சி நிறுவனம் விலைக்கு வந்துவிட்டதால் அதனை அவசரப்பட்டு வாங்கவேண்டாம் என்றும் நிதிசிக்கல்கள் ஏற்படும் என்றும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் மத்திய வங்கிகள் கட்டையை போட்டன. இந்த சூழலில் தங்கள் முதலீடு நிதி புழக்கத்தை அதிகரிக்குமே தவிர குறைக்காது என்று யுபிஎஸ் தெரிவித்துள்ளது. 1லட்சத்து 20 ஆயிரம் பேர் பணியாற்றும் கிரிடிட் சூய்சி நிறுவனத்தில் இருந்து 11ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. எதிர்ப்பையும் மீறி கிரிடிட் சூய்சியின் அமெரிக்க பிரிவையும் யுபிஎஸ் வாங்குவதால் அமெரிக்க பிரிவு வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.