சிட்டுக்கு, செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது….
டிவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மஸ்க் வாங்கிய பிறகு பல அதிரடி மாற்றங்கள் டிவிட்டரில் செய்யப்பட்டுள்ளன. இலவசமாக அளிக்கப்பட்டு வந்த டிவிட்டர் சேவைகளுக்கு கட்டணம் வசூல் என பல டெக் நிறுவனங்களுக்கு புதிய ரூட்டை மஸ்க் போட்டுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்தில் உள்ள லாரி பேர்ட் பறவையை வெப் வெர்சனில் நீக்கிய எலான் மஸ்க் தனது விருப்பமான நாய் புகைப்படத்தை மாற்றியுள்ளார். குருவிக்கு பதிலாக நாயின் புகைப்படத்தை வைத்துள்ள மஸ்க் , டாகீ என்ற கிரிப்டோ கரன்சியின் மிகப்பெரிய ரசிகராவார். இதன் விளைவாகவே கம்பெனி லோகோவை மஸ்க் மாற்றியுள்ளார். நிறுவனம் மிகப்பெரிய கடனில் உள்ள நிலையிலும் தனது விருப்பமான நாய் புகைப்படத்தை வைக்கும் பணிகளில் மஸ்க் ஈடுபட்டார். போதிய நிதியின்மை, கடன்களை அதிகரித்தது., நிறுவன ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது என்று அடுத்தடுத்து பல அதிரடிகளை காட்டிய மஸ்க் அண்மையில் தனது விருப்பமான நாய்க்குட்டிதான் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த சூழலில் டிவிட்டரில் நீல நிற பறவை செல்போன் செயலிகள் இயங்கும் வகையிலும், வெப் வெர்சனில் மட்டுமே நாய்க்குட்டி பொம்மை வரும்படி தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. டிவிட்டிரில் இத்தனை புதுமைகளை செய்து வந்தாலும், ஏற்கனவே பெற்று வந்த வெரிபிகேசன் திட்டத்தை தொடர விரும்பவில்லை என்று முடிவெடுத்துள்ளது டிவிட்டர் நிறுவனம். இது எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை காத்திருந்தே பார்க்க வேண்டும்.