வேலை பார்த்த கல்லூரியிலேயே சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரபலம்..
கான்பூர் ஐஐடியில் 1969ம் ஆண்டு பட்டம் பெற்ற இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அகமதாபாத்தில் உள்ள ஐஐஎமில் துவக்கத்தில் பணியாற்றினார். அதே நிறுவனத்தின் 58வது பட்டமளிப்பு விழாவில் நாராயணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அந்த காலகட்டத்திலேயே ஏர் இந்தியா,டிஸ்கோ,டெல்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் மாதம் ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் தர முன்வந்ததாக தனது நினைவுகளை பகிர்ந்தார். ஏர் இந்தியாவில் அளிப்பதாக இருந்த சம்பளத்தை விட பாதி சம்பளத்தில் அகமதாபாத் ஐஐஎம்மில் சேர்ந்ததாக நாராயணமூர்த்தி கூறியுள்ளார். சம்பளத்தை இலக்காக இல்லாமல் அறிவில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனது ஆசிரியர் சொன்னதே தம்மை இத்தனை தூரம் உயர்த்தியுள்ளதாக நாராயண மூர்த்தி கூறியுள்ளார். சம்பளத்தை விட கணினி சார்ந்த ஆர்வத்தை தேர்வு செய்ததே தனது வாழ்நாளில் எடுத்த மிகப்பெரிய முடிவு என்றும் நாராயண மூர்த்தி தனது இனிமையான நினைவுகளை அசைபோட்டார்.