ஐபோனே வைத்திருந்தாலும் இவர்களால் அதை செய்ய முடியாதாம்…
நம்மில் பலர் கூகுளின் பிளேஸ்டோருடன் மல்லுக்கட்டி வருகிறோம் ஆனால் தங்களைத்தாங்களே மேதாவிகள் என்று நினைக்கும் அளவுக்கு கெத்துடன் சுற்ற வைக்கும் தமிரை ஐபோன் உலக அனுபவம் தரும் என்கிறார்கள் அதனை பயன்படுத்துவோர்.. உண்மை அதுவாக கூட இருக்கலாம். இப்போது விஷயம் யாதெனில், அடுத்தமாதத்துக்குள் ஆப்பிளின் குறிப்பிட்ட மாடல் செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் வாட்ச்களின் சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் ஆப்பிளின் சொந்த பிளேஸ்டேரைக்கூட அவர்களால் அனுக முடியாது என்று புதிய அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் விட்டுள்ளது. iOS 11-11.2.6, macOS 10.13-10.13.3, watchOS 4-4.2.3, and tvOS 11-11.2.6 ஆகிய இந்த ஆப்பிள் தயாரிப்புகளை வைத்திருப்போர் விரைவாக தங்கள் சாப்ட்வேரை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பிரச்னை தான். பழைய சாப்ட்வேரில் பல சிக்கல்கள் இருப்பதால், புதிய மென்பொருளை தங்கள் போன்களில் இறக்குமதி செய்து கொள்ள வேண்டும் என்று ஆப்பிள் கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி செய்வதன் மூலம், ஆப்பிளின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான பயன்பாடு சாத்தியம் என்று ஆப்பிள் நிறுவனம் குறித்து செய்தி வெளியிடும் சில டெக் பிளாகர்கள் கூறுகிறார்கள். iOS 16.4.1 and iPadOS 16.4.1 ஆகிய புதிய மென்பொருள்களே வந்துவிட்ட சூழலில் பழையனவற்றை தொடர விரும்பவில்லை என்று ஆப்பிள் வட்டாரங்கள் கூறுகின்றன. பழைய மென்பொருளில் மேப்ஸ் மற்றும் சிரி உள்ளிட்ட அம்சங்களில் சிக்கல் நிலவுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த அம்சத்தை விரைவில் ஆப்பிள் சந்தைக்கு வெளியிட இருக்கிறது. எனினும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை.