பொய்சொல்லிதான் சாச்சிபுட்டாங்க யுவர் ஆனர்…
உலகளவில் கடந்த மாதம் இரண்டு பெரிய வங்கிகள் அமெரிக்காவில் திவாலாகின. இதன் விளைவாக அமெரிக்காவில் பெரிய பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், கேபிஎம்ஜி, கோல்டுமேன் சாச்ஸ்,மோர்கன் ஸீடான்லி உள்ளிட்ட சில நிறுவனங்களின் ஆடிட்டர்கள் மற்றும் உள்ளடக்க எழுத்தாளர்கள் சிலிக்கான் வங்கி பற்றி தவறாக எழுதியதன் விளைவாகத்தான் பங்குச்சந்தைகளில் சிலிக்கான் வேலி வங்கி பங்குகள விலை சரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இந்த நிறுவனங்கள், போட்டியை சமாளிக்க முடியாமல், வதந்தி பரப்பி விட்டதாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே சிலிக்கான் வேலி பங்ககுள் சரிவை சந்தித்துள்ளதது. அதாவது உண்மையான மதிப்புக்கு குறைவாகவே தொகை கணக்குக்கு காட்டப்பட்டதால்தான் பாதிப்பு ஏற்பட்டதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்தரப்பினர் எந்த பதிலையும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சில பொருளாதார நிபுணர்கள், கூற்றின்படி கடந்த 9 மாதங்களுக்கு முன்பே சிலிக்கான் வேலி குழுமம் பொருளாதாரத்தில் பின்னடைவை கண்டிருந்ததாக கூறப்படுகிறது. நிறுவனம் திவாலாகிவிட்டது ஆனால் முதலீட்டாளர்களுக்குத்தான் பெரிய பேரிடி என்றும் அந்நாட்டு முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் வழக்கில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.