Mr.அமெரிக்கா இது உங்களுக்கே நியாயமா இருக்கா.??
இந்தாண்டின் முதல் காலாண்டில் மட்டும் அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட டெக் நிறுவனங்கள் 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.இந்த அளவு என்பது 396விழுக்காடு அதிகமாகும். இதே காலகட்டத்தில் கடந்தாண்டு வேலை இழந்தோரின் எண்ணிக்கை 55,696 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில்தான் இந்த அளவானது அதிகரித்துள்ளது. அமெரிக்க பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அமெரிக்க நிறுவனங்கள் நிலைமையை கவனமுடன் கையாள்வதாக கூறியுள்ள நிபுணர்கள், இன்னமும் சில நிறுவனங்களுக்கு புதிதாக ஆட்கள் தேவைப்படுகின்றனர் என்கின்றனர். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள்தான் தங்கள் பணியாளர்களில் 38%பேரைவீட்டுக்கு அனுப்பியுள்ளனர். கடந்த 2001ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் தற்போதுதான் இத்தனை பெரிய பணிநீக்கங்கள் நடைபெற்றுவருவதாக அந்நாட்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. டெக் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக நிதிசார்ந்த நிறுவனங்களில்தான் அதிக பணிநீக்கங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் சுகாதாரம் சார்ந்த பணிகளில் இருப்போர்தான் ஆட்களை நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2023ம் ஆண்டுதுவங்கியது முதல் அமெரிக்காவில் சுகாதாரம் சார்ந்த பணியாளர்கள் 22,950 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் ஊடகத்துறையினர் உள்ளனர். இருப்போருக்கே வேலை இல்லை என்ற சூழலில் புதிதாக எடுக்க வேண்டிய ஆனால் எடுக்காமல் தள்ளிப்போட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை மட்டும் 9ஆயிரத்து 44 என்கிறது அமெரிக்க புள்ளிவிவரம். கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு இதுவே மிக அதிகபட்ச நிறுத்திவைப்பு திட்டமாக இருக்கிறது. ஒரு பக்கம் ஆட்களை வெளியேற்றுவது நடந்தாலும் மறுபக்கம் புதிய வேலைவாய்ப்புகளும் 3-ல் ஒரு பங்கு அமெரிக்காவில் நடந்துகொண்டே இருப்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.