நிலைமை கையை மீறி சென்றுவிட்டது போல…
அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டும் வகையில் அந்நாட்டில் தற்போது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மேலும் மேலும் உயர்த்திக்கொண்டே சென்றது. இது பாதகமான முடிவுகளை தர ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க கருவூலத்தின் முன்னாள் செயலர் லாரன்ஸ் சம்மர்ஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய லாரன்ஸ்,அமெரிக்க பெடரல் ரிசர்வ் இனியும் கடன்களை உயர்த்த வாய்ப்பு குறைவு என்றார். ஆனால் அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை மேலும் வலுவடைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலைமை கையை மீறி செல்வது வரை திடமான முடிவு எடுப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் அவர் சாடியுள்ளார். அமெரிக்காவில் வேலையிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வரும் சூழலில் இது இன்னமும் சிக்கலாகவே அதிக வாய்ப்பிருப்பதாக லாரன்ஸ் பீதியை கிளப்பியுள்ளார். கடன்களுக்கான வட்டி விகிதம் ஏற்றிக்கொண்டே செல்வதால் வங்கி கட்டமைப்பு சிதைந்ததால்தான் சிலிக்கான் வேலி வங்கி போன்ற சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நிலைமையை சீரமைக்க என்ன செய்யவேண்டும் என்பதை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் சம்மர்ஸ் கேட்டுக்கொண்டார்.