சிவாஜி பட ரஜினியை போல எல்லாத்தையும் வித்தா கூட பத்தாது போல…
கடும் பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் மட்டும் ஆறரை லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதனை அடுத்த 3 ஆண்டுகளில் அந்த நாடு திருப்பி தர வேண்டியுள்ளது. பாகிஸ்தானின் நிதி சிக்கல்கள் குறித்து அமெரிக்க அமைதி நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி பாகிஸ்தானின் பெரும்பாலான வெளிநாட்டுக் கடன் சீனாவுக்குத்தான் தரவேண்டியுள்ளது. ஜூன் 2026ம் ஆண்டுக்குள் இந்த தொகையை செலுத்த வேண்டி இருக்கிறது. மொத்த கடனில் 6-ல் ஒரு பங்கு சீனாவுக்கு மட்டுமே பாகிஸ்தான் அடைக்க வேண்டியுள்ளது. வெறும் 23 கோடி பேர் மக்கள்தொகையை கொண்ட பாகிஸ்தான் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த இயலாதபட்சத்தில் அந்நாட்டில்மிகப்பெரிய சிக்கல்கள் உருவாகும். சீனா மட்டுமின்றி சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தான் கடன்பட்டுள்ளது. இத்தனை பெரிய தொகையை திரும்ப அளிக்க இயலாமல் மீண்டும் சீனாவிடமே கடன்கேட்கும் சூழலுக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் சீனா இதே பாணியில் கடன் கொடுத்துள்ளது. எதி்ர்வரும் நிதியாண்டு அந்நாட்டுக்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்றும் அமெரிக்க நிறுவனம் கணித்துள்ளது. பாகிஸ்தான் இத்தனை பெரிய கடனை திரும்ப செலுத்தவே முடியாதபட்சத்தில் மிகப்பெரிய பாதிப்பை அந்நாட்டு ஏற்றுமதி சந்திக்க இருக்கிறது. அந்நாட்டுக்கு பயங்கரவாதமும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சிவாஜி படத்தில் வரும் ரஜினி கடைசியில் தனது வீடு, கார், பர்ஸ் முதல்கொண்டு கொடுத்துவிட்டு வருத்தமாக வெளியேறும் அதே நிலை தற்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.