கேம்பா கோலாவுக்கு கோலாகல ஏற்பாடு செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம்…
சில நினைவுகள் இந்தியர்கள் மனதில் இருந்து அத்தனை எளிதில் அழிக்க முடியாதவையாக இருக்கும். அந்த வகையில்தான் கேம்பா கோலா என்ற குளிர்பான நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பாக மிகமிக பிரபலமாக இருந்தது. அந்த கேம்பா கோலா நிறுவனத்தை மீண்டும் இந்தியாவிற்குள் அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் போதிய ஏற்பாடுகளை செய்துள்ளது. அத்தனை பெரிய ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது சென்னையை பூர்விகமாக கொண்டு இயங்கும் பொவென்டோ நிறுவனத்தையும் வாங்க பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. இத்தனை பெரிய வெள்ளைக்காரன் காலத்து குளிர்பான நிறுவனமான பொவென்டோ விரைவில் ரிலையன்ஸ் வசம் சென்றுவிடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். கேம்பா கோலாவைத் தொடர்ந்து பொவன்டோ மாதிரியான பிராண்டுகளை வாங்கி, அதே பெயரில் உள்ளூர் சந்தையில் வியாபாரத்தை தீவிரப்படுத்தவும் ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வட்டார கூல்டிரிங்க்ஸ் நிறுவனங்களை அந்தந்த உள்ளூர் மொழிகளில் கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பரப்படுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 17,225 கடைகளின் வணிகத் தொடர்பு உள்ளது. குஜராத்தில் சோய்சோ, ஆந்திராவில் கெம்பா கோலா.,தமிழ்நாட்டில் பொவென்டோ என பெப்சி, கொக்கக கோலாவுக்கு போட்டியாக இந்தியாவில் குளிர்பான விற்பனையிலும் ரிலையன்ஸ் ஒரு பெரிய வட்டமிட திட்டமிட்டுள்ளது. குஜராத்தை பூர்விகமாக கொண்ட அமுல் நிறுவனத்தின் ஐஸ்கிரீமையும் ரிலையன்ஸ் வாயிலாக விற்க பெரிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன