அமேசான் முதலாளியின் மிதக்கும் பிரமாண்டம் பற்றி தெரியுமா…?
அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் உலகப் பணக்காரர்களில் ஒருவராக வலம்வருபவர் ஆவார். இவர் அண்மையில் பிரமாண்ட சொகுசு கப்பல் ஒன்றை தனக்காகவே உருவாக்கி வந்தார், கடந்த 2018ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட அந்த நகரும் பிரமாண்ட கப்பலுக்கு பெயர் கோரு என்று வைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் புதிய தொடக்கம் என்பதாகும். எல்லா கோடீஸ்வரர்களுக்கும் ஏதோ ஒரு பொருளின் மீது ஆசை,ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. இப்படித்தான் ஜெப் பெசாசுக்கு இந்த கோரு மீது தீராத காதல் உள்ளது. இருக்காதா என்ன 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாயிற்றே.. ஓசியான்கோ என்ற நிறுவனத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.அப்படி என்னதான் இந்த சொகுசு கப்பலில் இருக்கிறது தெரியுமா.. இந்த கப்பலை நிர்வகிக்க ஒரு ஆண்டுக்கு செலவு மட்டும் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 230 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான் யாட்ச் வகை சொகுசு கப்பல் இதுவாகும்.127நீளம், கொண்ட இந்த சொகுசு கப்பலில் 18 விருந்தினர்கள் பங்கேற்க முடியும், இந்த கப்பலில் 40 பணியாளர்கள் இருப்பார்கள். ஒரு நீச்சல் குளம்,அலுமினியம் மற்றும் ஸ்டீலால் செய்யப்பட்டுள்ளது இந்த ராட்சத சொகுசு கப்பல், ஒரு நீச்சல் குளம், ஹெலிபேட் , சொகுசு கார்,நீர்மூழ்கிக்கப்பல் உள்ளிட்டவை இந்த பிரமாண்ட கப்பலின் தனிச்சிறப்பாகும். இத்தனை பெரிய பிரமாண்ட கப்பல்தான் உலகிலேயே பிரமாண்டமானதா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது. ஹிஸ்ட்ரி சுப்ரீம் என்ற கப்பல்தான் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த சொகுசு கப்பலாகும். இந்த கப்பலில் தங்கம்,பிளாட்டினம் தகடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.உலகிலேயே விலையுயர்ந்த கப்பலை சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வைத்துள்ளார் என்பது ருசிகரமான தகவலாகும்.