சித்திரை மாதத்தில் விலையேறும் !!!..
உலகளவில் பிரமாண்ட, சொகுசுகார்களின் வரிசைகளில் ஆடி காருக்கு ஒரு தனி இடம் எப்போதுமே உள்ளது. ஜெர்மனியில் உற்பத்தியாகும் ஆடி கார்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். ஏன் ஆடி காருக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.மேலும் பந்தா பண்ணாமல் விஷயத்தை சொல்கிறோம்..வரும் 1ம் தேதி முதல் ஆடி நிறுவனத்தின் q3 ரக கார்களின் விலை உயரப்போகிறதாம்.அதுவும் 1.6விழுக்காடு அதிகரிக்கிறதாம். இறக்குமதி வரி, மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த ரக கார் விலை உயர்த்தப்படுவதாக ஆடி கார் நிறுவனம் தெரிவிக்கிறது. ஏற்கனவே rs5,S5 ஆகிய ரக கார்களின் விலை ஏப்ரல் 1ம் தேதி முதல் 2.4 விழுக்காடு உயர்ந்துள்ளது. குறைந்த விலையில் கார்களை தர ஆடிக்கு ஆசைதான் என்றாலும், இறக்குமதி வரி அதிகம் என்கிறது அந்த நிறுவனம். வேறு வழியே இல்லாமல்தான் இந்த விலையேற்றத்தை அறிவிப்பதாக ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மெர்சிடீஸ் பென்ஸ் ரக கார்களின் விலை 2 முதல் அதிகபட்சம் 12 லட்சம் ரூபாய் வரை விலையேற்றம் கண்டுள்ளது.இந்த நிலையில் ஆடி நிறுவனமும் தனது காரின் விலையை ஏற்றியுள்ளனர். வெளிநாட்டு பணப்புழக்கம் அதிகம் இருப்பதால் அந்த கார்களின் வற்பனை சற்றே மந்தமடைந்துள்ளன.