அபராதத் தொகையை எப்படி வசூலிக்கணும், சொல்கிறது ரிசர்வ் வங்கி…
இந்தியாவில் கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அத்தனை பெரிய கடன் எல்லாருக்கும் இருக்கிறது. இந்த நிலையில் கடன்களுக்கான அபராதத் தொகையை எப்படி வசூலிக்க வேண்டும், எவ்வளவு வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை வரைவு அறிக்கையாக தயார் செய்துள்ளது. அதாவது எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார்களோ அதற்கு நிகரான அபராதம் தான் வசூலிக்க வேண்டும் என்றும் அதனை தாண்டக்கூடாது என்றும் மத்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. முக்கியமான நிபந்தனைகள் என்ன என்பதை கடன் வாங்க வருவோருக்கு வங்கிகளோ,நிதி நிறுவனங்களோ தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. நிதி நிறுவனங்கள் வழக்கமாக அதிகமாக அபராதத்தொகை வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில் அதுபற்றி குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, எவ்வளவு பணம் வட்டியாகவோ,அதிக அபராதத் தொகையாக வசூலிக்கப்படும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக புரியும்படி கடன் ஒப்பந்தத்தில் பெரிய எழுத்துகளால் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. குறிப்பாக வீட்டுக்கடன் வாங்குவோருக்கு புரிய வைக்கும் வகையில் வங்கிகளோ,நிதி நிறுவனங்களோ வட்டி விகிதங்கள், அபராதத் தொகை எவ்வளவு உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிடுகிறது. அபராதத் தொகை வசூலிப்பதில் உள்ள சிக்கல்களை கண்காணிக்க தனி குழு அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 8ம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்திருந்தார்.இதன்படியே ஒரு வரைவு அறிக்கையை ரிசர்வ் வங்கி தயாரித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அபராதத்தொகைக்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறதா என்பதையும் இந்த குழு கண்காணிக்க இருக்கிறது என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.