ஒரு வழியா அந்த நாளும் வருதா?
அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் கொரோனாவுக்கு பிறகான விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த படாதபாடுபட்டு வருகின்றனர். அதிலும் அமெரிக்க பொருளாதாரம் உலகளவில் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சக்திபடைத்தது. இந்த நிலையில்விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடன்கள் மீதான வட்டிவிகிதத்தை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ள அந்த வங்கி,அண்மையில் மீண்டும் வட்டிவிகித்ததை உயர்த்தியது. இதனால் வங்கிகள், பெரிய டெக் நிறுவனங்கள் பயங்கரமான பாதிப்புகளை சந்தித்தன. இந்த சூழலில் கோல்ட்மேன் சாச்ஸ் என்ற பிரபல நிறுவனம் அண்மையில் தனது நிபுணர் குழுவுடன் இணைந்து பல்வேறு கட்ட ஆய்வுகளை செய்தது. அதில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கண்டிப்பாக வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று கணித்துள்ள கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம், ஜூன் மாதம் அது நிறுத்தப்படும் என்று கணித்துள்ளது. எதிர்பார்த்த அளவை விட விலைவாசி வேகமாக கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ள கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன ஆய்வாளர்கள் அமெரிக்காவால் இதற்கு மேல் வட்டியை உயர்த்த முடியாது என்று தெரிவித்துள்ளது. மே மாதம் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயரும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து கடன்கள் மீதான வட்டிவிகிதம் குறையவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது. இதற்கு முன்பு கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் கணித்திருந்த தரவுகள் மிகச்சரியாக இருந்திருக்கிறது என்கிறது புள்ளி விவரம்.