பிரிட்டன் பிரதமரின் மனைவிக்கு 68 கோடி ரூபாய் டிவிடண்ட்!!!
பிரிட்டன் பிரதமராக அண்மையில் ரிஷி சுனக் பதவியேற்றுக்கொண்டார். இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மறுமகனான ரிஷி சுனக் நல்ல வசதி படைத்தவர். அவரின் மனைவி அக்ஷதா மூர்த்திக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து டிவிடண்டாக 68 கோடியே 17 லட்சம் ரூபாய் கிடைக்க இருக்கிறது. அவர் தனது தந்தையின் நிறுவனத்தில் 3 கோடியே 89 லட்சம் பங்குகளை தனது பெயரில் வைத்திருந்ததால் அவருக்கு இந்த டிவிடன்ட் அளிக்கப்படுகிறது.ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலகட்டத்தில் அவர் வைத்திருந்த பங்குகளுக்கு ஒரு ஷேருக்கு 17 ரூபாய் 50 காசுகள் அளிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டுக்கு மட்டும் ஒரு பங்குக்கு இன்போசிஸ் நிறுவனம் 31 ரூபாய் நிதியை டிவிடண்ட்டாக அளித்துள்ளது. அக்சதா மூர்த்தி வைத்திருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு மட்டும் 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது. மும்பை பங்குச்சந்தையில் அவர் வைத்திருக்கும் ஒரு பங்கின் மதிப்பு ஆயிரத்து 388 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் பிறந்த அக்சதா, தனக்கு கிடைக்கும் வருவாயக்கு முறையாக வருமான வரி செலுத்துகிறாரா, இந்திய பணத்தில் செலுத்துகிறாரா இல்லை பிரிட்டன் பவுண்டுகளில் செலுத்துகிறாரா என்ற பிரச்னை பிரிட்டன் அரசியல் வட்டாரங்களில் எழுந்த நிலையில் தற்போது கூடுதலாக டிவிடண்ட் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஃபேஷன் டிசைனிங், பிரெஞ்ச் மற்றும் பொருளாதார துறைகளில் பட்டம் பெற்ற அக்சதா ரிஷி சுனக்கை கடந்த 2009ம் ஆண்டு கரம்பிடித்தார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன்,மகள் உள்ளனர். இவர்கள் வாழும் பிரிட்டன் கென்சிங்க்டன் பகுதியில் உள்ள இல்லத்தின் மதிப்பு மட்டுமே 7 மில்லியன் பவுண்ட் மதிப்பு கொண்டது குறிப்பிடத்தக்கது. கலிஃபோர்னியில் எம்பிஏ படித்த சுனக்,அங்கு தான் அக்சதாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.