ஐடிபிஐ வங்கியை வாங்க ஆர்வம் காட்டும் வங்கிகள் யார் தெரியுமா..
திவாலாகி சரிவை சந்தித்திருக்கும் ஐடிபிஐ வங்கியை 5 நிறுவனங்கள் வாங்க முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐடிபிஐ வங்கியின் பெரும்பாலான பங்குகள் தற்போது அரசு வசம் உள்ளது.கோடக் மகேந்திரா வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி மற்றும் எமிரேட்ஸ் என்பிடி ஆகிய 3 நிறுவனங்கள் ஐடிபிஐ வங்கியை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஐடிபிஐ வங்கியை தனியார் வசம் ஒப்படைக்க இருப்பதால் மட்டும் அரசுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்க இருக்கிறது. கடந்த ஜனவரி மாதமே ஐடிபிஐ வங்கியை வாங்குவதற்கான இசைவுகள் பெறப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் வசம் வங்கியை விற்றுவிட்டாலும் அரசு பங்கு 15 விழுக்காடும்,19 விழுக்காடு எல்ஐசி வசமும் இருக்கும் என்ற விவகாரம்தான் தனியார் வங்கிகள் ஐடிபிஐ வங்கியை முழுமையாக வாங்க முடியாமல் தவிப்பதற்கு காரணம் என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஐடிபிஐ வங்கியை தனியார் நிறுவனங்கள் வாங்க உள்ளதாக வெளியான தகவலை அடுத்து அந்த வங்கியின் பங்குகளின் மதிப்பு 4.5 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.