NIKE,adidas ஷூ விலை குறையுமா ?
உலகளவில் பிரபல விளையாட்டு வீரர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை NIKE,adidas உள்ளிட்ட ஷூக்கள் என்றால் அத்தனை பெரிய ஆர்வமாக வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் குறிப்பிட்ட இந்த வகை ஷூக்களை தயாரிப்பதில் தைவானைச் சேர்ந்த பிரபல நிறுவனம் Pou Chen என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் தொடங்க இருக்கிறது. உலகளவில் இந்த நிறுவனம் 2022-ல் மட்டும் 272 மில்லியன் ஜோடி அளவுக்கு காலணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்துக்கு என வங்கதேசம்,கம்போடியா,மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் உற்பத்தி ஆலை உள்ளது. இந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டிலும் ஆலை தயாராக இருக்கிறது. இந்த ஆலை தமிழ்நாட்டுக்கு வருவதன் மூலமாக அடுத்த 12 ஆண்டுகளில் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே தைவானைச் சேர்ந்த சிறு காலணிகள் தயாரிக்கும் நிறுவனமான Hong Fu என்ற குழுமம் தமிழ்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபலமான காலணிகளை ஏற்றுமதி செய்வதில் தமிழ்நாட்டின் பங்கு 45விழுக்காடு அதிகமாகும்.கடந்த 5 ஆண்டுகளில் ஏற்றுமதியும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்ந்துள்ளதாக மாநில அரசும் விளக்கியுள்ளது. ஏற்கனவே தைவானில் இருந்து ஆப்பிள் செல்போன்களை தயாரிக்கும் பாக்ஸ்கான்,சால்காம்ப்,பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய ஆலைகளை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போது தைவானைச் சேர்ந்த காலணி உற்பத்தி நிறுவனமும் களமிறங்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனம் மட்டும் தமிழ்நாட்டில் 281மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருப்பதால் வணிகம் பெரிய அளவில் மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.