ஐயா!!! ஃப்ராடுனா யாருங்க ஐயா!!!…
பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் இருந்த நபர் ஒருவர் தொடர்பான வழக்கு கடந்த மார்ச் 27ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது யார் மோசடி நபர் என்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சில கருத்துகளை தெரிவித்தனர். இதனை காரணமாக காட்டி பலரும் தாங்கள் வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தாத சூழல் ஏற்படும் அச்சம் உள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் கூறிய கருத்து தனிப்பட்ட நபரை குறிப்பதாக இருக்குமா இல்லை பொதுவான கருத்தா இல்லை எப்படி என்று உச்சநீதிமன்றம் விளக்கினால் நன்றாக இருக்கும் என்று பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பழைய பணத்தை வசூலிப்பதிலும் சிக்கல் நிலவுவதாக ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பட்டய கணக்கர் தாக்கல் செய்யும் அறிக்கை தொடர்பாகவும், தீர்ப்பில் இன்னும் எளிமையான அம்சம் இருக்கும்பட்சத்தில் அதனை விளக்கவேண்டும் என்றும் , கொடுத்த பணம் திரும்ப வரவேண்டுமானால் அதற்கு ஏதும் நேர வரையரை இருக்கிறதா என்பது குறித்து நீதிமன்றம் விளக்க வேண்டும் என்றும் ஸ்டேட்வங்கி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கும் சூழிலில் உச்சநீதிமன்ற கருத்து என்பது மிகமுக்கியமானதாக பார்க்கப்படுகிறது.