நேரடி வரியை மாற்றும் திட்டமில்லை:
மத்திய அரசுக்கு நேரடி வருவாய் என்பது பல வகைகளில் வருகிறது. அதில் முக்கியமான ஒன்று வருமான வரி வசூலிப்பது. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளதால் இதனை இன்னும் எளிமையாக்க தற்போதுள்ள கட்டமைப்பு மாற்றி அமைக்கப்படுவதாக சில தகவல்கள் வெளியாகின. இதனை சுட்டிக்காட்டியுள்ள, வருமான வரித்துறை தற்போது வரை அதுபோன்ற எந்த திட்டமும் அரசின் வசம் இல்லை என்று கூறியுள்ளது. 2024ம் ஆண்டு பொதுத்தேர்தல் வரும்போது,மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியை பிடிக்கும்பட்சத்தில் தற்போதுள்ள வரிவசூல் முறை மாற்றப்படும் என்றும் சில தகவல்கள் பரவின.அதாவது அதிக சம்பளம் வாங்குவோருக்கு தற்போதுள்ள வரியை விட கூடுதல் வரியை வசூலிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்தது. மேலும் கேப்பிடல் டேக்ஸ் எனப்படும் முதலீட்டு வரியை எளிமையாக்கவும் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளதாகவும், இவ்வாறு எளிமையாக்கப்பட்டால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவும் பனிப்போரால் இந்தியா ஆதாயம் தேட விரும்புவதாகவும் தகவல்கள் கசிந்தன. இதனை வருமான வரித்துறை மறுத்த அடுத்த சில மணி நேரத்தில் பங்குச்சந்தைகள் 0.6% சரிவை சந்தித்தன.