வசதி படைத்த அரேபியா காரங்க இப்படி செய்யலாமா.!!!.
உலக பொருளாதாரத்தை புரட்டி எடுத்தகொரோனாவுக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது ரஷ்யா-உக்ரைன் போர் என்றால் அது மிகையல்ல. இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் மீறும்பட்சத்தில் கடும் பொருளாதார தடைகள் இருக்கும் என்றும் எச்சரித்திருந்தன. இந்த சூழலை பயன்படுத்தி இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இந்த சூழலில் அரபு நாடுகளில் சிலவும், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் உள்ளது.
மலிவு விலையில் ரஷ்யாவில் பெட்ரோல்,டீசல் போன்ற கச்சா எண்ணெய் கிடைப்பதை அறிந்த அரேபியர்கள் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கு சுத்தீகரித்து விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.
இது கொஞ்சம் நஞ்சமாக நடக்கவில்லை, ஒரே ஆண்டில் வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.வழக்கமாக சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயின் அளவு வெறும் 13 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது. போருக்கு முன்பு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயே வாங்காத சவுதி அரேபியா தற்போது நாள் ஒன்றுக்கு 1லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வாங்கி குவித்து வருகிறது. அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அண்மையில்தான் உற்பத்தி குறைப்பை சவுதி அரேபியா அறிவித்தது. ஒரு பக்கம் உற்பத்தியை குறைத்துவிட்டு, மற்றொரு பக்கம் ரஷ்யாவிடம் இருந்து வாங்கி அதிக விலைக்கு விற்கும் ராஜதந்திரத்தில் சவுதி அரேபியா ஈடுபட்டுள்ளது. எண்ணெயை அதிகம் சேமித்து வைக்க வசதியுள்ளதாலும் ரஷ்ய கச்சா எண்ணெய்சவுதி அரேபியாவில் அதிகம் சேர்த்து வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் எதிர்ப்பையெல்லாம் மீறி சவுதி அரேபியா உள்ளிட்ட சில அரபு நாடுகள் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன.