இப்ப இருக்க டிவிட்டர் டீம்தான் பெஸ்ட் தெரியுமா..!!!!
டிவிட்டர் நிறுவனத்தை கடந்தாண்டு அக்டோபரில் டெஸ்லா நிறுவனத்தின் முதலாளி எலான் மஸ்க் பெருந்தொகை கொடுத்து வாங்கினார். நிறுவனத்தை வாங்கியதும் முதல் வேலையாக பெரியளவு தேவையில்லாத பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். இது பற்றி பேட்டியளித்துள்ள எலான் மஸ்க், தற்போதுள்ள டீம் மிகச்சிறப்பாக பணியாற்றுவதாக கூறினார். கிட்டத்தட்ட 80விழுக்காடு பணியாளர்கள் சென்றுவிட்ட பிறகு வெறும் 20விழுக்காடு பழைய பணியாளர்களை கொண்டு டிவிட்டர் நிறுவனம் திறம்பட செயல்படுவதாக அவர் பாக்ஸ்நியூஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பி்ட்டுள்ளார். மஸ்க் தனது பணியாளர்களை புகழ்ந்து தள்ளினாலும் சமீப காலத்தில் டிவிட்டர் செயலியின் இயக்கத்தில் பெரிய சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். ஏற்கனவே பிபிசி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின்போதும் மஸ்க் ஆட்குறைப்பு பற்றி பேசியிருந்தார். வலிமிகுந்த ஆட்குறைப்பு நடவடிக்கை கட்டாயமாக செய்யவேண்டியிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார். டிவிட்டர் நிறுவனத்தில் அடுத்தடுத்து செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் தற்போது அந்தநிறுவனம் ஓரளவுக்கு மீண்டுள்ளது என்று அதன் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். ஒரு நிறுவனம் நன்றாக நடக்க அத்தனை அதிக ஆட்கள் தேவைஇல்லை, இருக்கும் பணியாளர்கள் திறம்பட செயல்பட்டாலே போதும் என்ற தொனியில் மஸ்க் பேசியிருப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.