மொட்ட ராஜேந்திரன் ஸ்டைலில் இன்கிரிமெண்ட் தந்த பிரபல நிறுவனம்!!!
உலகளவில் பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் நிறுவனம் காக்னிசன்ட், இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவிகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 3 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மூத்த மக்கள் அதிகாரி ரெபெக்கா திடீரென பதவியை ராஜினாமா செய்த நிலையில் காக்னிசன்ட் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளித்துள்ளது. ஏற்கனவே அந்த நிறுவனம் ஆறு மாதங்களுக்கு முன்புதான் தனது பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அளித்தது.அந்த நிறுவனம் கடந்த 18 மாதங்களில் மூன்று இன்கிரிமென்ட் போட்டுள்ளது. நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு செல்வதை தடுக்கும் உத்தியாக இதனை பார்ப்பதாக மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் டெக் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், சிலநிறுவனங்களின் முயற்சிகளால் தங்கள் பணியாளர்கள் வெளியேற்றம் தடுக்கப்பட்டுள்ளதாகவும் மனிதவளப்பிரிவு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.