விழுந்துக்கிட்டே கிடந்தவங்க நிமிர்ந்தாங்க…
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக பெரிய சரிவுகளை சந்தித்து வந்தன.இந்த நிலையில் ஏப்ரல் 20ம் தேதி வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குகள் ஏற்றம் கண்டன. குறிப்பாக மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 64 புள்ளிகள் உயர்ந்து 59ஆயிரத்து 632 புள்ளிகளாக இருந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 5 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 624 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. என்டிபிசி,அதானி போர்ட்ஸ்,ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ்ஆட்டோ,டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் கண்டன.டிவிஸ் லேப்,இந்துஸ்தான் யுனிலிவர்,டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்தன. தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் சரிந்துள்ளன. ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 650 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 200 ரூபாயாகவும் உள்ளன.வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 81 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒருகிலோ ரூ.81 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. தங்கம் வெள்ளி விலை இங்கே கூறியிருப்பது சும்மா பெயர் அளவுக்கு மட்டுமே.. உண்மையில் தங்கம் வாங்கும்போது இங்கே சொன்ன விலையுடன் 3விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கடைக்கு தகுந்தபடி செய்கூலி, சேதாரம் ஆகியன மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.