சுத்தி வளச்சி எப்படிலாம் கம்பி கட்றாங்க…
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய்க்கு தடை விதித்துள்ளது. ஆனால் தற்போது இந்தியாவின் உதவியால் ரஷ்ய எண்ணெய் ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா… ஆமாம் தற்போதுள்ள விதிகளின்படி,இந்தியாவில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கக் கூடாது என்று எந்த தடைகளும் கிடையாது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து மட்டும் வாங்கக்கூடாதாம். நிலைமை இப்படி இருக்க ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கிய இந்தியா சுத்தீகரித்து தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அனுப்பி வைத்து லாபம் பார்க்கிறது.
கிடைத்த வரை லாபம் என்று மலிவான விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் இந்தியா, அதனை சுத்தப்படுத்தி டீசலாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் பேரல் டீசல் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்பு ரஷ்யாவில் இருந்து கடல்வழியாக ஐரோப்பிபய ஒன்றியத்துக்கு அதிகளவில் கச்சா எண்ணெய் அனுப்பி வைக்கப்பட்டது. பொருளாதார தடை விதிக்கும் நோக்கில் ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான பந்தம் துண்டானது.ஆனால் இந்தியாவின் உதவியால் தற்போது ரஷ்ய கச்சா எண்ணெய் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைக்கிறது.