பங்குச்சந்தை உயர்ந்திருச்சி!!!
கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய உயரத்தை இந்திய பங்குச்சந்தைகள் ஏப்ரல் 28ம் தேதி எட்டியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 463 புள்ளிகள் அதிகரித்து 61ஆயிரத்து 112 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 150 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 65 புள்ளிகளாக இருந்தது. சந்தையின் முதல் பாதி நிலையற்றதாக இருந்தது. இரண்டாவது பிற்பகுதியில் பங்குகளை வாங்கும் அளவு அதிகரித்தது. இதனால் பங்குச்சந்தைகளில் நல்ல ஏற்றம் காணப்பட்டது. தகவல் தொழில்நுட்பம்,பொதுத்துறை வங்கிகள்,மூலதன பங்குகளின் எழுச்சியால் இந்திய சந்தைகள் லாபதிசையில் திரும்பின.Adani Enterprises, Adani Ports, Britannia Industries, Wipro ,Nestle India ஆகிய நிறுவன பங்குகள் பெரிய லாபத்தை பதிவு செய்தன. Axis Bank, ONGC, HCL Technologies, JSW Steel ,Titan Company ஆகிய நிறுவனங்கள் பெரிய வீழ்ச்சியை சந்தித்தன.கிட்டத்தட்ட அனைத்ததுறை பங்குகளுமே விலையேறி முடிந்ததால் முதலீட்டாளர்கள் பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர் Hindustan Aeronautics, Aditya Birla Capital, L&T, ITC, DLF, CCL Products, Glenmark Pharmaceuticals, Surya Roshni உள்ளிட்ட துறை பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளன. பங்குச்சந்தைகள் சாதகமான நிலை நிலவியது. ஆனால் தங்கம் மட்டும் விலை குறையவே மாட்டேன் என்று அடம்பிடிக்கும் அளவிலேயே உள்ளது.ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் விலை குறைந்து 5ஆயிரத்து 620 ரூபாயாகவும் , ஒரு சவரன் தங்கம் ரூ.44ஆயிரத்து 960 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 80 ரூபாய் 20 காசுகளாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 80,020 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலே கூறியிருக்கும் விலையானது பெயரளவிலான விலை மட்டுமே,நீங்கள் நகை வாங்க விரும்பினால் ஏப்ரல் 28ம் தேதி ஜிஎஸ்டியாக 1348ரூபாயும், இது மட்டுமின்றி கடைக்கு கடை செய்கூலி சேதாரம் மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இயன்றவரை செய்கூலி சேதாரம் இல்லாத ஆன்லைன் தங்கமாக வாங்குவது நல்ல பலனை தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை…