டெக் மகேந்திரா இவ்வளவு பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருக்கா…
உலகளவில் நிகழும் அடுத்தடுத்த சம்பவங்களால் பெரிய நிறுவனங்களே ஆட்டம் கண்டுள்ள நிலையில் சாதாரண பொதுமக்களின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உதாராணமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் போர் நடந்தால் தங்கமும்,கச்சா எண்ணெயும் விலை ஏறுவதைப்போல உலக நிகழ்வுகள் ஒன்றுடன் மற்றொன்று தொடர்புடையவை.ஏன் இதை சொல்கிறோம் என்றால் உலகளவில் நிகழும் மாற்றங்களின் அடப்படையில் டெக் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படும் டெக் மகேந்திராவும் இதில் இருந்து தப்பவில்லை. இந்த நிறுவனம் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் தனது வருவாயில் 26 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. இது 4-ல் 1 பங்காகும்.அதிகரிக்கும் செலவுகள், சர்வதேச நிலையற்ற தன்மை ஆகிய காரணிகளால் கடந்த காலாண்டில் வருவாய் 25.8விழுக்காடு சரிந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம்,புதிய ஒப்பந்தங்களை பெறும் அளவு கிட்டத்தட்ட பாதியாக அதாவது 592 மில்லியன் டாலராக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்மகேந்திராவின் பெரும்பாலான சேவைகள் அமெரிக்காவை நம்பியே இருந்தது. அமெரிக்காவில் வங்கித்துறை பங்குகள் சரிந்ததால் அதன் தாக்கம் இந்தநிறுவனத்திலும் பிரதிபலித்தது. டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களும் கணிசமான வருவாய் இழப்பை சந்தித்தன. டெக் மகேந்திரா நிறுவனத்தின் செலவு மட்டும் 124.94 பில்லியன் ரூபாயாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை டெக் மகேந்திரா நிறுவன பங்குகள் 0.69விழுக்காடு உயர்ந்துள்ளது.ஆனால் கடந்தாண்டு அளவை விட 1.3 விழுக்காடு சரிந்துள்ளது.