புது ரூல்ஸ் போடும் குஜராத் அரசு!!!
அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தபட்ச டிவிடண்ட் மற்றும் போனஸ் பங்குகள் வழங்க புதிய கொள்கையை குஜராத் அரசாங்கம் வகுத்துள்ளது. குஜராத்தின் அரசுத்துறையைச் சேர்ந்த 7 பங்குகள் மிகவும் லாபகரமாக உள்ளன. எவ்வளவு குறைந்தபட்சம் எவ்வளவு அதிகபட்சம் டவிடண்ட் அளிக்கப்பட்டன என்பது மட்டும் அறிவிக்கவேண்டும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது. வெளியிட்ட பங்கை திரும்ப வாங்கிக்கொள்ளும் முறைக்கு பைபேக் என்று பெயர். அவ்வாறு பைபேக் செய்யும் அரசுத்துறை நிறுவனங்கள் நிகர சொத்து மதிப்பு 2ஆயிரம் கோடி ரூபாயாகவும்,வங்கிக்கணக்குகளில் ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு வைத்திருப்பதும் புதிய கொள்கையின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருக்கும் பங்குகளை உடைக்க வேண்டுமானால்,பொதுத்துறை நிறுவன பங்குகளின் மதிப்பை விட 50 மடங்கு கூடுதலாக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 1 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கு வேண்டும் என்பதும் கட்டாயமாகும். குஜராத் அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த புதிய நடவடிக்கைகள் மிகவும் வரவேற்கத் தக்க அம்சம் என்றும்,இதே பாணியை அனைத்து தரப்பு பங்குகளும் செய்தால் நன்றாக இருக்கும் என்றும்,நிர்வகிப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.