மீண்டெழுந்து வரும் வோடஃபோன் நிறுவனம்
வோடஃபோன் நிறுவனம் ஒரு காலகட்டத்தில் உலகளவில் பிரபலமானதாக இருந்தது. இந்தியாவில் வோடஃபோனும் ஐடியா நிறுவனமும் இணைந்து வி என்ற பெயரில் சேவைகளை அளித்து வருகிறது.இந்த நிலையில் சரிந்து கிடந்த அந்த நிறுவனத்தில் நல்ல வளர்ச்சி மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதனால் குமாரமங்கலம் பிர்லா , வி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக சேர விருப்பம் தெரிவித்துள்ளார். சுதந்திரமான இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டிருந்த போது பெரிய அளவில் செயல்பாட்டில் இல்லாமல் இருந்தார். தற்போது வணிகம் சூடுபிடிக்கத் தொடங்கியதை அடுத்து அவர் மீண்டும் இயக்குநராக ஆர்வம் காட்டியுள்ளார். சந்தையில் 3 தனியார் நிறுவனங்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடனில் சிக்கித்தவித்த வோடஃபோன் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் தற்போது அரசு வசம் உள்ளன. இதன் காரணமாக சரிந்து கிடந்த வோடஃபோன் நிறுவன வணிகம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு புரோமோட்டராக மீண்டும் வி நிறுவனத்தை மீட்டெடுக்க அந்த நிறுவனத்தின் சுதந்திரமான இயக்குநரான குமார் மங்கலம் பிர்லா, தனது மகன் மற்றும் மகளையும் நிறுவனத்தில் சேர்த்துள்ளார்.