இன்போசிஸை மிஞ்சிய ஐடிசி எதில் தெரியுமா?
சந்தை மூலதனத்தில் ஐடிசி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் 6-வது பெரிய இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் தான் எச்டிஎப்சி நிறுவனத்தை மிஞ்சிய ஐடிசி நிறுவனம் அண்மையில் இன்போசிஸ் நிறுவனத்தையும் மிஞ்சியுள்ளது. ஒரு பங்கின் விலை 412 ரூபாய் என்ற அளவில் உள்ள நிலையில்,டிசிஎஸ் நிறுவனத்தை ஐடிசி நிறுவனம் மிஞ்சியுள்ளது. கடந்தாண்டு 52% லாபத்தை தந்த ஐடிசி நிறுவனம் தற்போது இந்தாண்டில் மட்டும் 24 விழுக்காடு அதிக லாபத்தை தந்துள்ளது. அதேநேரம் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 26% டிசம்பரில் இருந்து வீழ்ந்துள்ளன. ஐடிசி நிறுவன பங்குகளை வாங்கிப்போடும்படி அறிவுறுத்தும் நிபுணர்கள் , இன்போசிஸ் நிறுவன பங்குகளை விற்றுவிடும்படி தெரிவிக்கின்றனர். சிகரெட் நிறுவனங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஐடிசிக்கு வெளிநாட்டு நிதியும் அதிகளவில் குவிகிறது. இரண்டு மற்றும் 3ம் தர நகரங்களில் ஐடிசி நிறுவன பங்குகள் நல்ல லாபம் பார்த்து வருகின்றன. தகவல்தொழில்நுட்பம் மற்றும் மிகப்பெரிய பங்குகளே சறுக்கிய சூழலிலும் நிலையான வளர்ச்சியை ஐடிசி நிறுவனம் எட்டியுள்ளது.