வங்கிகளை கண்காணிக்கும் சக்தி காந்ததாஸ்
அமெரிக்காவில் இரண்டு பெரிய வங்கிகள் திவாலான நிலையில், இந்திய வங்கிகள் குறித்து ரிசர்வ் வங்கி தீவிர கண்காணிப்பை செய்து வருகிறது. வணிகம் குறையும்போது அது சார்ந்த அம்சங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மிகவும் முதலீடுகள் குறைந்த நிலையில், அதே மாதிரியான சிக்கல் தற்போது இருப்பதை சக்தி காந்ததாஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வங்கிகள் திவாலானதில் இருந்து இந்திய வங்கிக்க கட்டமைப்பை தீவிரமாக ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. சில வங்கிகளின் வாராக்கடன் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள சக்தி காந்ததாஸ்,மார்ச் 2021-ல் வாராக்கடன் விகிதம் 7.3%ஆக இருந்ததாகவும், கடந்தாண்டு மார்ச் மாதத்தில் 5.8%, கடந்த டிசம்பரில் இது 4.41% ஆக சரிந்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் மீண்டும் வராமல் பாதுகாக்கவே தீவிர கண்காணிப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சிக்கலான கடன்கள் குறித்த நிலையையும் ரிசர்வ் வங்கிசரிபார்த்து வருகிறது. சைபர் தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில் அதிநவீன நுட்பங்களை பயன்படுத்தி வங்கிக்கட்டமைப்பு பாதுகாக்கப்படுவதாகவும் அவர்சுட்டிக்காட்டினார்.பிரிட்டன் மற்றும் அமெரிக்க வங்கிகளிடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவும், நல்ல நேரத்தில் கெட்ட நேரம் பற்றி யோசித்ததாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.