தொடர்ந்து ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்!!!
இந்திய பங்குச்சந்தைகள் மே 2ம் தேதி ஏற்றம்கண்டன. மும்பைபங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்ந்தன.61ஆயிரத்து354 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் உயர்ந்துள்ளது. 18 ஆயிரத்து 147 புள்ளிகளில் தேசிய பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவுற்றது. மொத்தம் 2053 நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. 1472 நிறுவன பங்குகள் சரிந்தன. 176 புள்ளிகள் மாற்றமின்றி தொடர்ந்தன. ONGC, Tech Mahindra, HDFC Life, Hindalco , Maruti Suzuki நிறுவன பங்குகள் அதிக லாபம் பெற்றிருந்தன. Hero Motocorp, Sun Pharma, UltraTech Cement, Bharti Airtel, Tata Motors நிறுவன பங்குகள் விலை குறைந்தன. வீட்டு உபயோக பொருட்கள்,மருந்துத்துறை பங்குகள் மட்டுமே சரிந்தன. மற்ற பெரும்பாலான பங்குகள் விலையேற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.உலோகத்துறை பங்குகள் லாபத்தை கொடுத்தன. நிப்டி எனர்ஜி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தன. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 5615 ரூபாயாகவும், ஒரு சவரன் 44920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 50 காசுகளாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரத்து 500 ரூபாயாக இருக்கிறது. தங்கத்தை ஆபரணங்களாக வாங்க நினைத்தால் இதனை கவனியுங்கள். நீங்கள் வாங்கும் தங்கம் 22 கேரட்டா என்பதை கடைக்காரரிடம் ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்யுங்கள், இது மட்டுமின்றி செய்கூலி , சேதாரம் கடைக்கு கடை மாறுபடும், இருப்பதிலேயே குறைவான செய்கூலி,சேதாரம் எந்த நிறுவனம் தருகிறதோ அதை தேர்வு செய்யுங்கள். நீங்கள் தங்கம் வாங்க நினைத்தால் ஒரு கிராம் விலையாக இங்கே நாங்கள் கூறியுள்ள விலையுடன் 3 விழுக்காடு (ரூபாய்168.45-மே 2-ல் ஒரு கிராம் தங்கத்துக்கு நீங்கள் செலுத்தும் ஜிஎஸ்டி) மற்றும் செய்கூலி சேதாரம் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. நண்பர்கள் கூட உதவாத போது தங்கம் உதவும்,அதனால் இயன்ற வரை தங்கம் சேர்த்து வையுங்கள் உங்கள் வருங்காலத்துக்கு உதவும்..வாழ்க வளமுடன்.