சூரரைப்போற்று சூர்யா போல தவிக்கும் விமான நிறுவனம்!!!!
சூரரைப்போற்று படத்தில் ஒரு விமானத்தை பறக்க வைக்கவும் அதில் உள்ள சிக்கல்களையும் அப்பட்டமாக கூறியிருப்பார்கள் அதே பாணியில்தான் கோ ஃபர்ஸ்ட் என்ற நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்துள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து அண்மையில்தான் எம்.டியாக இருந்த ஜே வாடியா என்பவர் விலகியிருந்தார். திடீரென இந்த நிறுவனம் திவாலாக என்ன காரணம் என்று பார்த்தால் அந்த நிறுவனத்திற்கு இன்ஜின்களை Pratt & Whitney என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. ஏர்பஸ் நிறுவன விமானமாக இருந்தாலும் அதற்கான இன்ஜின்களை இந்த குறிப்பிட்ட நிறுவனம்தான் தயாரி்த்து அளித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு வெறும் 7விழுக்காடாக இருந்த கோளாறான விமான இன்ஜினின் அளவு தற்போது 50 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. அடிக்கடி இன்ஜின் பழுது காரணமாக பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படாமல் இருக்கிறது. இதனால் வருவாய் ஈட்ட முடியாமல் இந்த நிறுவனம் தவித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உல்ள NCLT, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் கோஃபர்ஸ்ட் நிறுவனம் முறையிட்டுள்ளது. அதில், தங்களால் விமானங்களை இயக்க போதுமான பணம் திரட்ட முடியவில்லை என்றும், தங்களுக்கு விமான இன்ஜின் தரும் நிறுவனம் பிரச்சனை செய்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது நிலைமை சீரானால் கூட தங்கள் நிறுவனம் மீண்டும் விமானங்களை இயக்க செப்டம்பர் மாதம் வரை அவகாசம் பிடிக்கும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அதுவரை விமானங்களை நிறுத்தி வைக்கப்போவதாகவும், பறக்க முடியாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.