வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அடித்த எச்சரிக்கை மணி..!!!
பாதுகாப்பு இல்லாத கடன்களை அதிகம் அளிக்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதாவது உலகளவில் நிலைமை சரியில்லை என்றும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன், ஐரோப்பாவில் வங்கிகள் கட்டமைப்பு சரிந்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு ரிசர்வ் வங்கி அண்மையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பாதுகாப்பு இல்லாத பர்சனல் லோன்,கிரிடிட் கார்டு கடன், சிறுவணிக கடன்களை குறைவாக அளிக்கும்படி ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. ஜூன் 2020க்கு பிறகு தனியார் வங்கிகள் பாதுகாப்பு இல்லாத கடன்களை வழங்குவது அதிகரித்துள்ளதாக ரிசர்வ்வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2022 பிப்ரவரி முதல் 2023 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்பு இல்லாத கடன் 2லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது.இது அனுமதிக்கப்பட்ட கடன் அளவை விடவும் அதிகம் என்கிறது புள்ளிவிவரம் கேர் என்ற புள்ளிவிவரத்தின்படி, இதே காலகட்டத்தில் வீட்டுக்கடன் வாங்கியோரின் அளவு என்பது 2லட்சத்து 49ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாத கடன் என்பது வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கு நிகராக அதாவது 13லட்சம் கோடி ரூபாயாக தனியார் நிறுவனங்கள் அளித்த கடனும் இருப்பதாக கேர் அறிக்கை கூறுகிறது. சில நிமிடங்களில் ஆவணங்களை சரிபார்க்காமல் இன்ஸ்டன்டாக வழங்கும் கடன்களை சற்று கவனித்து வழங்க வேண்டும் என்றும் ரிசர்வ்வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.