சிக்கலில் சிக்கிய ஷாரூக் கான்!!!
இந்தியாவில் கல்வி வியாபாரமயமாக்கப்பட்டத்தற்கு மிகச்சிறப்பான சான்று பைஜூஸ் மற்றும் இன்னும் சில கல்வி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய வணிகத்தை செய்து வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நீதிமன்றம் பைஜூஸ்க்கும் ஷாருக்கானுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மோசடி செய்ததாக இளம்பெண்ணுக்கு உரிய இழப்பீடும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக அபராதமும் விதிக்கப்பட்டது. விஷயம் யாதெனில் பிரியங்கா தீக்ஷித் என்பவர் இந்தூரில் உள்ள பைஜூஸ் கோச்சிங் சென்டரில் ஐஏஎஸ் பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். பைஜுஸ் நிறுவனம் கேட்ட கட்டணமான 1லட்சத்து 8 ஆயிரம் ரூபாயையும் அவர் செலுத்தியுள்ளார்.ஆனால் கடந்த 2021ம் ஆண்டு தனக்கு வகுப்புகளும் நடத்தவில்லை, கட்டிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. இதனால் அவர் நீதிமன்ற படிகளை நாடினார். உடனே களமிறங்கிய அரசு அமைப்பும், நுகர்வோர் அமைப்பும், சட்டவிரோதமாக பணம் பெற்ற பைஜூஸ் நிறுவனமும், கொடுத்த பணத்தை திரும்ப அளிக்காததால் அதனை திருப்பி செலுத்தவேண்டும் என்று அறிவித்தது. மேலும் முழு தொகையும் ஆண்டுக்கு 12 %வட்டி மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.5000 இழப்பீடும் அளிக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே 2011ம் ஆண்டு , இந்த நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ஏற்கனவே அமலாக்கத் துறையினர் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.