நீண்டு கொண்டே செல்லும் லிஸ்ட்!!!!
அமெரிக்காவில் மேலும் ஒருவங்கி பெரிய சரிவை சந்தித்துள்ளது. அந்த வங்கியின் பெயர் பர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க். குறிப்பிட்ட இந்த வங்கியில் ஏராளமானோர் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து வந்தனர். இந்த வங்கியில் பெரும்பாலான பணக்காரர்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து திரும்ப எடுக்கத் தொடங்கினர். அன்றில் இருந்து இந்த வங்கி சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்க அரசு அந்த வங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. சுமார் 100 பில்லியன் அமெரிக்கடாலர்கள் சரிந்த அந்த நிறுவனத்தின் பங்குகளை பிரபல ஜே.பி. மார்கன் வங்கி வாங்க முடிவு செய்துள்ளது. 1985ம் ஆண்டு ஜம் ஹெர்பர்ட் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த வங்கி,மிகப்பெரிய கடன்களை மலிவான வட்டியில் தந்து பிரபலமடைந்ததாகும். இந்த வங்கியை பேங்க் ஆப் அமெரிக்காவும் சிலகாலம் நிர்வகித்து வந்தது. பல ஆண்டுகள் நன்றாக சென்ற இந்த நிறுவன வணிகம், போதிய காப்பீடு செய்யப்படாமல் இருந்தது.இதன் விளைவாக பலரும் தங்கள் தொகையை இஷ்டத்துக்கும் எடுத்து வந்தனர். இந்த நிலையில் அண்மையில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் தங்கள் முதலீடுகளை எடுத்ததால் அந்த வங்கிக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் சரிந்தது. குறைவான விகிதத்தில் கடன் கொடுத்து வந்த இந்த வங்கி , கடந்தாண்டு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தடுமாறி நின்ற இந்த வங்கியின் பங்கை பிரபல வங்கியான ஜே.பி.மார்கன் வாங்கியது. 10.6 பில்லியன் அளவுக்கு பணம் கொடுத்துவிட்டு ஜே.பி.மார்கன் நிறுவனம் பர்ஸ்ட் ரிபப்ளிக் நிறுவன சொத்துகளை கையகப்படுத்திக் கொள்கிறது. ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் நிறுவனத்தின் கடன்கள் மற்றும் முன்னணி பங்குகளை ஜே.பி.மார்கன் வாங்காமல் தவிர்த்துள்ளது.