இந்திய சந்தைகளில் லேசான சரிவு!!
இந்திய பங்குச்சந்தைகளில் மே 3-ம் தேதி லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிந்தன. 61 ஆயிரத்து193 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 57 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து89 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. மும்பை பங்குச்சந்தையில், இஞ்சினியர்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் பங்கு 12 விழுக்காடு விலை ஏற்றம் கண்டது. இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் 1.37 விழுக்காடு தேசிய பங்குச்சந்தையில் உயர்ந்தது. அதானி என்டர்பிரைசர்ஸ்,அதானி போர்ட்ஸ் நிறுவன பங்குகள் குறிப்பிடத்தகுந்த அளவு சரிந்தன.மும்பை பங்குச்சந்தையில் மணப்புரம் நிறுவனத்தின் பங்குகள் 12 விழுக்காடு சரிந்தன. தங்கம் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 728 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 45 ஆயிரத்து 648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் உயர்ந்து 81 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்து 81 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் வாங்கும் போது இந்த விலையுடன் 3 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி, அதோடு நகைக்கான செய்கூலி சேதாரத்தை சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.