ஜூம் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துவிட்டதா?
கொரோனா காலத்தில் பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரின் மீட்டிங்கை சிறப்பாக கையாண்ட பெருமை கொண்ட நிறுவனம் ஜூம், குறிப்பிட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் பேன் இந்தியா டெலிகாம் நிறுவனமாக லைசன்ஸ் வாங்கியுள்ளது. இந்தநிறுவனம் பிரத்யேகமாக வீடியோ மற்றும் ஆடியோ கால்கள் அளித்து வருகின்றன. இது போக இன்னும் பிற சேவைகளையும் செய்ய இருப்பதாக அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பணியாளர்களை ஒன்றிணைக்கும் பணிகளில் பல நிறுவனங்களுக்கு பிரத்யேகமாக சேவைகளையும் இந்த நிறுவனம் தர இருக்கிறது. ஜூம் போன் என்ற வசதியையும் அந்த நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.இந்த வசதியின் மூலம் 47 நாடுகளுக்கு செல்போனில் பேசுவது போலவே பேசிக்கொள்ள இயலும் இதற்கான பணிகளை பிபிஎக்ஸ் என்ற நிறுவனம் செய்ய இருக்கிறது.ஜூம் போன் என்ற சேவை ஆண்டுக்கு ஆண்டு நூறு விழுக்காடு வளர்ச்சி அடைந்திருக்கிறதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.