பொருளாதாரத்தை பற்றி பேச சொன்னால் முட்டைய பற்றி பேசுகிறார் அம்மையார்!!!
தென்கொரியாவில் ஆசிய முன்னேற்ற வங்கியின் 56வது ஆண்டுகூட்டம் நடைபெற்றது.இதில் பெரிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இந்தியநிதியமைச்சர் அம்மையார் நிர்மலாசீதாராமன் பங்கேற்று பேசினார். அதாவது பொருளாதாரம் என்பது முட்டையும் கோழியும்போன்றது என்று அவர் பேசியுள்ளார். பெருந்தொற்று நேரத்தில் திடீரென இந்தியாவுக்கு அதிக பணம் தேவைப்பட்டதாக கூறியுள்ள அவர்,முழுமையான வளர்ச்சி இல்லாமல் சிக்கலில் இருந்து ஒரு தேசம் மீண்டுவராது என்றும் அவர் கூறியிருக்கிறார். ஒரு பிரச்னை வருகிறது எனில் உடனே அதிகபாதிப்பை சந்திக்கும் நபர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்திய கடனுக்கும் ஜிடிபிக்குமான அளவு 2024 நிதியாண்டில் 67.1%-ல் இருந்து 2021ம் நிதியாண்டில் 88.5% உயர்ந்ததாக கூறிய நிதியமைச்சர், 2028 வரை இந்த அளவு 83.6%ஆகவே நீடிப்பதாக கூறியுள்ளார். அனைத்து நாடுகளும் டிஜிட்டல் மயமான உலகத்தை உருவாக்காவிட்டால் மக்கள் அதனால் எளிதில் பயனடைய முடியாது என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார். தொழில் முனைவு விகிதம் எளிமையாகவும்,அதிகரிக்கவும்பட வேண்டும் என்றும் நிதியமைச்சர் கூறுகிறார்.