டிம்குக் ஹாப்பி அண்ணாச்சி..
உலகிலேயே விலை உயர்ந்த, மதிப்புமிக்க பிராண்டுகளில் பிரதானமாதாக திகழ்கிறது ஆப்பிள் நிறுவனம். இந்த நிறுவனம் தனது படைப்புகளை எப்போது அறிமுகப்படுத்தினாலும் அதில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கிறது. இந்த நிலையில் அண்மையில் டெல்லி மற்றும் மும்பைக்கு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக், இரண்டு நேரடி விற்பனை நிலையங்களை திறந்து வைத்தார். அப்போது குக்கை கண்ட இந்திய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். இதனை அதே உற்சாகத்துடன் பகிர்ந்துள்ள டிம் குக். இந்தியா மிகப்பெரிய வலுவான சந்தை என்று தங்கள் செல்போனை வாங்க இந்தியர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார். ஆண்டுக்கு ஆண்டு இந்தியர்கள் ஆப்பிள் நிறுவன பொருட்களை வாங்கும் அளவானது இரட்டை இலக்கங்களை தொட்டு வருவதையும் குக் சுட்டிக்காட்டினார். தாம் இதற்கு முன்பு இத்தனை மகிழ்ச்சியாக இருந்ததே இல்லை என்று கூறியுள்ள டிம் குக், இந்தியாவில் மக்களும், பங்குதாரர்களும்,ஆப்பிள் பணியாளர்களும் ஒருவித உத்வேகத்துடன் இருப்பதாக புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் தற்போது தான் வறுமை நிலையில் இருந்து மீண்டு நடுத்தர குடும்பத்தினர் என்ற இடத்துக்கு வந்துள்ளதாகவும், அவர்களிடம் ஆப்பிள் நிறுவன பொருட்களை விற்பனை செய்து அவர்கள் வாழ்வில் வரும் மாற்றங்களை காண விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.ஆப்பிள் நிறுவன பொருட்களை அளித்து அதன் மூலம் வருவாய் மக்கள் ஈட்டுவது குறித்தும் குக் பேசினார்.