செயற்கை நுண்ணறிவு படிச்சா சம்பளம் டபுள்..
சாட்GPT என்ற செயற்கை நுண்ணறிவு நுட்பம் உலக டெக் நிறுவனங்களின் போக்கையே மாற்றி வருகிறது. அடுத்தது என்ன நடக்கும் என்ற அல்காரிதம்களை இந்த அம்சம் கச்சிதமாக தருவதால் பல உள்ளூர் நிறுவனங்கள் முதல் பெரிய பெரிய ஜாம்பவான் நிறுவனங்கள் வரை AI நுட்பத்தை பயன்படுத்த முன்வருகின்றனர். இது வரமா சாபமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், இப்போதைக்கு இதுதான் டிரெண்டாக உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் அதிகமான டெக் பணியாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் தற்போது பணியாற்றும் சூழல் என்பது உலகில் ஏதோ ஒரு மூளையில் கணினி பழுதானால் இந்தியாவில் இருந்தபடியே தீர்த்து வைப்பது மட்டுமாகத் தான் இருக்கிறது. ஆனால் தற்போது வரை இந்தியாவில் வெறும் 4 லட்சத்து 16 ஆயி்ரம் பேருக்கு மட்டுமே செயற்கை நுண்ணறிவு நுட்பம் தெரிந்திருக்கிறது. இந்த நுட்பம் தெரிந்தவர்கள் தற்போது வாங்கும் சம்பளத்தை அப்படியே இரட்டிப்பாக தரவும் பெரிய நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனர். புதிதாக தேவைப்படும் டேட்டா சயிண்ஸ் படித்தவர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு படித்தவர்களுக்கான தேவை என்பது 51 விழுக்காடாக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் இருந்துதான் இந்தியாவின் பெரும்பாலான AI பொறியாளர்கள் உலகின் பல நாடுகளுக்கும் பணிகளுக்கு செல்கின்றனர். பெங்களூருவில் இருப்போரில் பலர் ai நுட்பத்தை படிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த 3 ஆண்டுகளில் இந்த துறைக்கான தேவைகள் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் இதனை படிப்பது அத்தனை பெரிய பிரகாசமான எதிர்காலத்தை தரும் என்கிறார்கள் நிபுணர்கள்.