கோ பர்ஸ்ட் விவகாரம், ஒரே பேமண்ட்!!!
பிரபல தொழில் குழுமமான வாடியா குழுமம் நடத்தி வரும் கோஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவாலாகியுள்ள நிலையில், வங்கிகளுக்கு கணிசமான தொகை கடனாக தர வேண்டியுள்ளது. இந்த நிலையில் வங்கிகளுக்கு தரவேண்டிய பணத்தை ஒரே முறை செட்டில்மண்ட்டாக அளிக்க வாடியா குழுமம் திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவுக்கு கடனை வங்கிகள் திரும்பப்பெற இருக்கின்றன. இந்த நிலையில், கோஃபர்ஸ்ட் நிறுவனம் கடனை செலுத்தாமல் போகவில்லை என்பதால் குறைவான பணத்தை மட்டும் பெற்றுக்கொள்ள வங்கிகள் திட்டமிட்டு உள்ளன. வழக்கமாக திவால் நோட்டீஸ் என்று வழங்கப்பட்டால் அது பிரிவு 7,8,9 ஆகிய பிரிவுகளில் வழங்கும் இதற்கு அர்த்தம் யாதெனில் நாங்கள் திவாலாகிவிட்டோம், எங்கள் பொருட்களை கடன் கொடுத்தவர்கள் விற்று பணமாக மாற்றிக்கொள்ளுங்கள் என்று அர்த்தம் ஆனால் கோஃபர்ஸ்ட் நிறுவனம் 10ம் எண் பிரிவில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது எந்த பொருளை விற்கவேண்டும் என்பதை கோஃபர்ஸ்ட் நிறுவனம்தான் முடிவு செய்யும்.விமான நிறுவனத்தை முற்றிலும் விற்காமல் தற்போதைய சூழலை மட்டும் சரிசெய்யும் வகையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால் வங்கிகள் கொடுத்த கடன் உத்தரவாதத்துடன் இருக்கும் என்பதால் வங்கிகள் மேலும் கடன் தரவே விரும்புகின்றன. இருக்கும் விமானங்களில் 28 விமானங்களில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நிறுவனத்தை நடத்த முடியாமல் அந்த நிறுவனம் திவால் நோட்டீஸை அளித்துள்ளது.ஒரு நாளைக்கு இந்த நிறுவனம் 180-185 விமானங்களை இயக்குவதுடன், 30 ஆயிரம் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.