முழுசா புதுசா மாறப்போகுது கூகுள்…
இண்டர்நெட் என்ற ஒன்று அறிமுகமான காலகட்டத்தில் இருந்து பலருக்கும் தெரிந்த ஒரே பெயர் கூகுள். இந்த நிறுவனத்தால் கோடிகளில் சம்பாதித்தவர்கள் ஏராளம், இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தனது தேடுபொறியை முற்றாக மாற்ற திட்டமிட்டுள்ளது. கூகுள் தேடுபொறி கண்களை கவரும் விதமாகவும்,மனிதர்களை எளிதில் கவரும் வகையிலும் மாற்ற அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் தோற்றத்தை மாற்றும் பணிகள் வேகமெடுத்துள்ளன. சாட் ஜிபிடி போன்ற அதிநவீன தொழில்நுட்பம் மக்களை ஆட்சி செய்யத் தொடங்கியுள்ள நிலையில் அதற்கு போட்டியாக கூகுளும் தனது தோற்றத்தை மாற்றி வருகிறது. 10 நீள நிற லிங்குகள் வரும் வகையில் தேடும் அம்சம் மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. அதிக மனித குரல்கள் கேட்கும் வகையில் கூகுள் மாற்றப்படுகிறது. microsoftஇன் சாட் ஜிபிடிக்கு போட்டியாக magi என்ற செல்லப்பெயரில் புதிய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தையும் கூகுள் தயார் செய்து வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு google io அறிவிப்பு கூட்டத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருக்கும் நுட்பங்களே மக்களை தலை சுற்ற வைக்கும் நிலையில், மெய்யை சில்லிட வைக்கும் புதிய நுட்பங்கள் அறிவியல் நமக்கு அளித்த கொடை என்றே சொல்ல வேண்டும்.