பிரிட்டன் மன்னரின் சொத்துக்கள் உயர்வா?
மே 6ம் தேதி பிரிட்டனின் மன்னராக மூன்றாம் சார்லஸ் முடி சூட்டிக்கொண்டார். அரச கடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனிப்பட்ட வருமான வரியையும் அவர் செலுத்தி வியக்க வைத்தவர் ஆவார். உலகிலேயே ஒரு குடும்பத்துக்கு அதிக சொத்துகள் இருக்கும் என்றால் அது நிச்சயம் பிரிட்டன் அரச குடும்பத்துக்காகத்தான் இருக்கும். அரச குடும்பத்தின் வருவாய்க்கு பஞ்சமே இல்லை என்றாலும் அந்த குடும்பம் அண்மையில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. பிரிட்டனில் மட்டும் அந்த குடும்பத்திற்கு 1லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இது நியூயார்க் நகரத்தின் அளவுக்கு நிகரானது. இந்த குடும்பத்தின் நிறுவனமான கிரவுன் எஸ்டேட்டில் மட்டும் வருவாய் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியிருக்கிறது. அதுவும் வெறும் 10 ஆண்டுகளில் (2012-2022) தற்போது அரச குடும்பம் வசித்து வரும் 6 சொத்துகளுக்கும் மக்கள் வரிப்பணித்தில் தான் நிர்வாகம் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த தேசத்தையும் தன்வசம் வைத்திருந்த அரச குடும்பம் பெரும்பாலான சொத்துகளை 1760களை பொதுமக்களுக்கு அளித்தது. அதன் ஒரு பகுதியாகத்தான் கிரவுன் எஸ்டேட் நிறுவனம் உருவாக்கப்பட்டு, அரசாங்கம் சார்பில் அரச குடும்பத்துக்கு இந்த நிறுவனத்தில் இருந்து கணிசமான வருவாயை மாதச்சம்பளம் போல அளித்து வருகின்றனர். ஒரு பக்கம் பிரிட்டன் மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டு வரும் அதே சூழலில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் சொத்து மற்றும் அவர்கள் அளித்த ரியல் எஸ்டேட் நிறுவனம் வருவாயை குவித்து வருகிறது.மன்னராக இருந்தாலும் எளிமையின் உருவமாக திகழவே பெரும்பாலான அரச குடும்பத்தினர் விரும்புகின்றனர்.