தங்கம் : உயர்வும் சரிவும்
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 45 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் தங்கம் 18 ரூபாய் அதிகரித்து 5,710 ரூபாயாக இருக்கிறது.வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. இது நடுத்தர குடும்பத்தினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படி விடாமல் உயர்ந்தபடியே செல்லும் தங்கத்தின் விலையின் பின்னணியையும் பார்க்கலாம்.2022-23 காலகட்டத்தில் மட்டும் 35 பில்லியன் டாலருக்கு தங்கம் வாங்கப்பட்டுள்ளது. அதாவது தங்கத்தின் இறக்குமதி 24விழுக்காடு சரிந்துள்ளது. உலகளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற சூழல்,காரணமாக இந்த தங்க இறக்குமதி குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. 2021-22 காலகட்டத்தில் தங்கத்தின் இறக்குமதி 46.2 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இந்தாண்டு பிப்ரவரி வரைதான் தங்கம் வாங்கும் அளவு மிகவும் குறைந்ததாக புள்ளிவிவரம் கூறுகிறது. ஆனால் மார்ச் மாதத்தில் மீண்டும் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. வெள்ளியின் இறக்குமதி கடந்தாண்டைவிட இந்தாண்டு 6.12% அதிகரித்துள்ளது. கடந்தாண்டு வர்த்தக பற்றாக்குறை 191பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில் இது இந்தாண்டு 267 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது
இறக்குமதி மீதான வரி அதிகரித்ததே மொத்த இறக்குமதி சரிய காரணமாக கூறப்படுகிறது. உலகத்திலேயே தங்கத்தை அதிகம் அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக இந்திய உள்ளது. ஒரு ஆண்டில் சராசரியாக 800 முதல் 900 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. தற்போது இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி வரி 15% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சிக்கல்,ரஷ்யா -உக்ரைன் போர், சீனாவின் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகள் இந்த நிலைமையை சிக்கலாக்கியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.